சனி, 12 ஜூலை, 2014

என் வாழ்க்கையில் புத்தகம்

என் வாழ்க்கையில் தமிழின் ஆரம்பத்திலிருந்து, புத்தகம் ஆரம்பமானது.தாய் மொழி தமிழாததால் தமிழின் மேல் அலாதி விருப்பம்.ஆனாலும் எழுத்துபிழை இருக்கும் இலக்கணப்பிழையும் இருக்கும்....ஹி...ஹி..
பள்ளிப்பருவத்தில் புத்தகம் என்றால்,பெரியம்மா வீட்டில் இருந்த ‘சிறுவர் மலர்’ மற்றும் ‘தங்கமலர்’ தான்.பின் ராஜேஷ்குமார்,இந்திரா சௌந்தர்ராஜன் மற்றும் சில குடும்ப நாவல்கள் படித்தேன்.
ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பொழுது மத்திய நூலகத்தை அறிமுகம் செய்துவைத்தார் இயற்பியல் ஆசிரியர்.அப்பொழுது தான் நூலகத்தையே பார்த்தேன் முதல்முறையாய்.அவர் பெயர்  கூட ஞாபகம் இல்லை.ஆனால் நூலகத்தில் கணக்கை துவங்கமுடியவில்லை அறியாமையாலும் பயத்தினாலும்.
நான் கல்லூரியில் புத்தகத்தின் மேன்மையை இன்னும் அறிந்துக்கொண்டேன் அதற்கு பெரிதும் உதவியது.....என் அன்புத் தோழி பவ்ய பரமேஸ்வரி, புத்தகப்புழு அவள்.நூலகத்தில் இருந்து அவள் எடுத்து வந்ததை படித்துவிட்டு எனக்களிப்பாள்.அப்படி படித்த புத்தகங்கள் பிடல் காஸ்ட்ரோ,பெரியார்,காமராஜர் என தலைவர்களை தெரியவைத்தது.மனஇயல்,அரசியல் என அறிவை பெறுகவைத்தது...
சில புத்தகங்களை வாங்கினேன்,படித்தேன்,நூலகத்தில் பவ்யாவின் உதவியால் கணக்கை துவங்கினேன்.படிக்க ஆரம்பித்துள்ளேன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக