சனி, 8 நவம்பர், 2025

செங்கிஸ்கான்-முகில்

 


'நேஷ்னல் ஜியோகிராபிக்' சேனலின் சிறப்பு ஆவணப்படம் தான் எனக்கு செங்கிஸ்கானை அறிமுகப்படுத்தியது.. சில வருடங்களுக்கு பிறகு, எனக்கு பிடித்த ஆசிரியர் முகிலின் புத்தகங்களை சேகரிக்கும் பொழுது  'செங்கிஸ்கான்' புத்தகம் கிடைத்தது.வெறும் 175 பக்கங்கள் மட்டுமே கொண்ட தனிமனித வரலாறு. சாதாரண பழங்குடிமகன் குறைவான ஆயுதபலம்,படைபலம் வைத்துக்கொண்டு, படிப்பறிவு இல்லாமல் தன் தனித்துவமான யுக்திகளை மட்டுமே முதன்மையான கொண்டு மத்திய ஆசியாவை தன் வசமாக்கியிருக்கிறார்.இந்த புத்தகத்தில்   சிறியவனாய் இருந்தாலும் பெரும் கனவு காண முடியும் என்பதை கற்றுக்கொண்டேன். ஒரு பேரரசின் சிறிய அறிமுகமே இந்த புத்தகம்.



வெள்ளி, 1 ஜூலை, 2016

சுஜாதாவின் புத்தகங்களும் நானும்

எனக்கு விவரம் தெரிஞ்சி ஏழாவது படிக்கும் போதுதான் சும்மா பொழுதுபோக (அம்மாவுடையது)முதல் முதலாய் புதினம்(நாவல்)படிக்க ஆரம்பிச்சேன்,ஏதோ ஒரு குடும்ப நாவல் தான்.கதை பெயர் ,ஆசிரியர் பெயர் ஞாபகத்திற்கு வரலை,ஆனா அந்த கதை சில காட்சிகள் தவிர்த்து எல்லாம் ஞாபகம் இருக்கு.அப்போ ஆரம்பிச்சி இப்போ வரை நிறைய புதினம் படிச்சி இருக்கேன் கட்டுரை ,கதை ரெண்டு மட்டும் தான் பிடிக்கும்,கவிதைக்கும் எனக்கும் ஆகவே ஆகாது அதனால சரியான நாவல் எதுன்னு தெரியாம இருந்தாலும்,அம்மா வாங்குவாங்க நானும் படிப்பேன் அவ்வளவுதான் (புதினம்னாக்ரைம் நாவல்’ , ‘குடும்ப நாவல்மாறி தான் விலைக்குறைச்சலா வரும்னு நினைச்சிட்டு இருந்தேன்ன பார்த்துக்குங்க).அனேகமா அதுராஜெஷ்குமார்,சுபா,இந்திரா சௌந்தரராஜன்ஆகத்தான் இருக்கும்.அது என் கல்லூரி வரை தொடர்ந்தது. ‘சுஜாதாமுதல்ல தொலைக்காட்சி மூலமாய்தான் அறிமுகம் ஆனார். என்னை பொருத்தவரை அவர் ஒரு எழுத்தாளர், நாவல்கள் திரைப்படமா வந்திருக்கு, டைரக்டர் மணிரத்தினம், ஷங்கரின் நண்பர். ஒரு நாள் கல்லூரியில நானும் பவ்யாவும் (தோழி) ஒரு நாள் புத்தகத்தை பற்றி பேசும்போது,”மாலதிசுஜாதாகதைய படிச்சி இருக்கியான்னு கேட்டா. “இல்லைன்னு, கேனைத்தனமா ஒரு விழிச்சேன் பாருங்க!! . அடுத்த நாள் நூலகத்தில இருந்து எடுத்துட்டு வந்தஆரியபட்டா’, அந்த கதை ஒரு பழைய படம் போல் இருந்தது (அந்த நாள், 1954, சிவாஜி கணேசன், பண்டரி பெயர், பாடல்கள் இல்லாத முதல் தமிழ்ப்படம்).அதன் முன்னுரையில் தெரிந்தது அது அவருடைய கரு இல்லையென்பது, அது ஒரு கனடா மொழி திரைப்படத்திற்காக எழுதியது, அதனால் சின்ன ஆருதல். அதற்கு அப்புறம் நிறைய அவரை பற்றி தெரிந்துக்கொண்டேன் முதல்ல பவ்யா மூலமா, அடுத்து சில புத்தகங்க மூலமா, இப்போ இணையத்துல தெரிஞ்சிக்கிட்டே இருக்கேன்,சுஜாதாவ தெரிஞ்சிக்கும் போது பல எழுத்தாளர்களை பற்றி தெரிஞ்சிக்கிட்டேன்ஜெயகாந்தன்,ஜெயமோகன்,ரா.கி.ரங்கராஜன்’.ஆனா நூலகத்துல ஆயிரக்கணக்கான புத்தகம் எங்கன்னுப்போய் தேடுவேன் நம்ம சுஜாதாவ.இணையத்துல இருந்து டவுன்லோட் செஞ்சி படிக்க எவ்வளவு நேரமாக போகுது,ஆனா அது சிறுகதைகளுக்குப் பொருந்தும்,நாவலுக்கு மத்தவங்கவளுக்கு எப்படியோ எனக்கு புத்தகம் தான்.காசுகொடுத்து வாங்கலாம்னா பல தேவைங்க நிறைவேறாமையே இருக்கு ,நிறைய நான் சம்பாதிச்சி வாங்கனும்.இந்த கஷ்டத்துக்கு நடுவுல ஒரு அதிசயம்.
                                                                இரத்தம் ஒரே நிறம்
ஒரு நாள் நூலகத்தில இருந்து வந்த என் அம்மாஇரத்தம் ஒரே நிறம்புத்தகத்தை எடுத்துட்டு வந்தாங்க.எனக்கு ஒரே குஷி. இரண்டே நாள்ல தூக்கத்தை கெடுத்துக்கிட்டு படிச்சி முடிச்சிட்டேன்.ஒரு திரைப்படத்தை பார்த்த அனுபவம்,ரொம்ப அருமையான,விறு விறுப்பான காட்சிகள்.சுஜாதாவிற்குன்னு தனி எழுத்துபாணி இருந்ததை புரிந்துக்கொண்டேன்.அந்த நாவல் சுஜாதா எழுதிய இரண்டு சரித்திர நாவல்களில் ஒன்று.பத்தொண்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் (1856) நடந்த சிப்பாய் கலகத்தை முன்னிருத்தி பல உண்மை சப்பவத்தோடு பிணைக்கப்பட்டு இருந்து.
அதற்கு பிறகு ஆர்வம் தாங்க முடியாமல் இனையத்தை நாடினேன்.சுஜாதாவின் நாவல்களை தொடர்ந்தது வேட்டையாட ஆரம்பித்தேன்.
கொலையுதிர்காலம்
கனேஷ்-வசந்த் கதாப்பாத்திரங்களைக்கொண்ட துப்பறியும் நாவல்.துப்பறியும் நாவல் என்னுடைய பிடித்த தலைப்புகளில் ஒன்று.1977இல் வெளியான நாவல்.இந்தனை வருடம் கழித்தும் அதன் விறுவிறுப்பு குறையவில்லை .சுஜாதாவின் நாவலில் இது சிறந்தது அல்ல ஆனால் பொழுதுப்போக்கிற்கு வாக்குறுதி உண்டு.பொழுதுபோக்கிற்கு சிறந்தது கொஞ்சம்பேண்டசிலைட்டா கடைசியா இருக்கும்.
                                                                   ஓடாதே            
அடுத்த கனேஷ்-வசந்த் துப்பறியும் நாவல், ஆனால் பாதி பகுதிக்கு மேல் தான் இருவரும் வருவார்கள்.மீரா-ஆனந்த் கதாபாத்திரங்கள் கதையில் ஓடிக்கொண்டேயிருப்பார்கள், கடைசியில் நிற்கும்போது ஷ்ஷப்பா…..முதல் பகுதி பர பரன்னு போகும்.

நைலான் கயிறு,நிர்வாண நகரம்,அரிசி(சிறுகதை),மிஸ்டர் முன்சாமி ஒரு 1.2.1(சிறுகதை),ஆனாமிகா(சிறுகதை) நீண்டுக்கொண்டே போகிறது.                                                     

சனி, 12 ஜூலை, 2014

ஒளிவதற்கு இடமில்லை

ஒளிவதற்கு இடமில்லை” இரண்டாம் பாகம் நாவல் என் வீட்டுமாடத்தில் பார்த்தேன்!!!.என் அம்மா தான் நூலகத்திற்கு சென்று வாங்கிவந்திருந்தார்.கூடவே என் தங்கை தேர்ந்தெடுத்த மேலும் இரு புத்தகங்கள் இருந்தன,ஆனால் என்னை கவர்ந்தது இந்த தலைப்பே...முதலில் இதை கட்டுரை என்று நினைத்து பிரித்தேன்!அது ரா.கி.ரங்கராஜன் எழுதிய நாவல்.இதுவரை கேள்விபடாத பெயராய் இருக்க,என் தோழி பவ்யாவை தொடர்புகொண்டு விசாரித்தேன். “அவருடைய கதைகள் நன்றாக இருக்கும்...படி”என ஆசிரியருக்கு பாராட்டு பத்திரம் கொடுக்க..தையல் வேலை முடித்துவிட்டு படிக்கத்துவங்கினேன்.



கதை இதுதான்:
வைரக்கற்கள் பதிக்கப்பட்டு ஒரு தமிழராலும்,ஒரு சீனராலும் சேர்ந்து செய்யப்பட்ட முருகப்பெருமான் சிலையை,அதை பாதுகாக்கும் குழந்தைப்பாண்டியனிடம் இருந்து பறிக்க எண்ணுகிறது ஒரு சீனா புரட்சி கும்பல்.அந்த வேலையை முடிக்க இருவரை பயன்படுத்துகிறது.ஒருவன் நல்லவன் ‘ரமணன்’,துப்பறியும் நிபுணர். தாவூத் என்னும் விசுவாசி சிறுவனுக்காக வைரமுருகனை களவாட துணிகிறான்.இன்னொருவன் மகா அயோக்கியன் ‘நஞ்சுண்டன்’,பணத்திற்காக திருடச்செல்கிறான்.இவர்களால் குழந்தைப்பாண்டியனின் குடும்பத்தில் என்ன கொடுமைகள் நேர்ந்தது,வைரமுருகன் களவாடப்பட்டதா இல்லையா ,தாவூதின் உயிர் காப்பாற்றபட்டதா,.....என்பதை விறுவிறுப்பான கதைக்களத்துடன் தந்துருக்கிறார் ஆசிரியர்.
பாராட்டவேண்டிய அம்சங்கள்:
ü      முதலில் பாராட்ட வேண்டியது தலைப்பு, “ஒளிவதற்கு இடமில்லை”.கதைக்களத்திற்கு பொருத்தமானதாய் அமைந்ததுதான்.பிரபல எழுத்தாளர் மறைந்த சுஜாதா அவர்களால் ாராட்டை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
ü      இது ஒரு க்ரைம் நாவல் என்பதாலோ என்னவோ,கதை ஜெட் வேகத்தில் செல்கிறது ஆகையால் அடுத்து என்ன நடக்குமோ என்ற பரபரப்பு பிடித்துக்கொள்கிறது.
ü      முக்கியமான சாராம்சம் இக்கதையில் என்னவென்றால் என்னைப்போல் முதல்பாகம் படிக்காதவர்களுக்கு அதன் தொடர்ச்சியான இந்த இரண்டாம் பாகம் புரியாமல் இல்லை.படிப்பவருக்கு முதல் பாகத்தின் நிகழ்ச்சியை இதில் கோர்த்து கொடுத்திருந்தார்.
ü      துணை கதாப்பாத்திரங்களை சரியாக பயன்படுத்திருந்தார்.முக்கியமாக தாவூதின் கதாபாத்திரம்,இறுதி பகுதியில் கலங்கவைக்கிறது.

இத்தகைய பாராட்டுக்குரியவர் ரா.கி.ரங்கராஜன்(மறைவு:ஆகஸ்ட் 2012)

Ø  அற்புதமான கதையுடன் இந்நாவல் இருந்தாலும் சில லாஜிக்கில்லாத விஷயங்கள் திணிக்கப்பட்டுள்ளது .ஆனால் அது தெலுங்கு ஹிரோயிப்படம் போல் இல்லை,மிகவும் சிறிய விஷயங்ளே உள்ளது.
        


ரா.கி.ரங்கராஜன் மிக சிலருக்கே தெரிந்த ஒரு எழுத்தாளர்.இவ்ர் கட்டுரைகள்,சிறுகதைகள்,கவிதைகள் என பலவாய் இருந்தவர்.இக்கதையை  டி.துரைசாமி என்னும் புனைப்பெயரைக்கொண்டு ஒரு வார இதழில் 20 பகுதிகளாய் எழுதிருக்கிறார். ‘குமுதம்’ வார இதழின் துணை ஆசிரியராய் பணியாற்றிய இவர் எழுதிய நாவல் “சுமைத்தாங்கி”,என்ற பெயரில் திரைப்படமாய் வந்துள்ளது. “அடிமையின் காதலி”,என்னும் நாவலே அவருடைய கடைசி விருப்பம் ,ஆனால் அதற்க்குள் அவரை மரணம் தழுவியது.


என் வாழ்க்கையில் புத்தகம்

என் வாழ்க்கையில் தமிழின் ஆரம்பத்திலிருந்து, புத்தகம் ஆரம்பமானது.தாய் மொழி தமிழாததால் தமிழின் மேல் அலாதி விருப்பம்.ஆனாலும் எழுத்துபிழை இருக்கும் இலக்கணப்பிழையும் இருக்கும்....ஹி...ஹி..
பள்ளிப்பருவத்தில் புத்தகம் என்றால்,பெரியம்மா வீட்டில் இருந்த ‘சிறுவர் மலர்’ மற்றும் ‘தங்கமலர்’ தான்.பின் ராஜேஷ்குமார்,இந்திரா சௌந்தர்ராஜன் மற்றும் சில குடும்ப நாவல்கள் படித்தேன்.
ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பொழுது மத்திய நூலகத்தை அறிமுகம் செய்துவைத்தார் இயற்பியல் ஆசிரியர்.அப்பொழுது தான் நூலகத்தையே பார்த்தேன் முதல்முறையாய்.அவர் பெயர்  கூட ஞாபகம் இல்லை.ஆனால் நூலகத்தில் கணக்கை துவங்கமுடியவில்லை அறியாமையாலும் பயத்தினாலும்.
நான் கல்லூரியில் புத்தகத்தின் மேன்மையை இன்னும் அறிந்துக்கொண்டேன் அதற்கு பெரிதும் உதவியது.....என் அன்புத் தோழி பவ்ய பரமேஸ்வரி, புத்தகப்புழு அவள்.நூலகத்தில் இருந்து அவள் எடுத்து வந்ததை படித்துவிட்டு எனக்களிப்பாள்.அப்படி படித்த புத்தகங்கள் பிடல் காஸ்ட்ரோ,பெரியார்,காமராஜர் என தலைவர்களை தெரியவைத்தது.மனஇயல்,அரசியல் என அறிவை பெறுகவைத்தது...
சில புத்தகங்களை வாங்கினேன்,படித்தேன்,நூலகத்தில் பவ்யாவின் உதவியால் கணக்கை துவங்கினேன்.படிக்க ஆரம்பித்துள்ளேன்.