வெள்ளி, 1 ஜூலை, 2016

சுஜாதாவின் புத்தகங்களும் நானும்

எனக்கு விவரம் தெரிஞ்சி ஏழாவது படிக்கும் போதுதான் சும்மா பொழுதுபோக (அம்மாவுடையது)முதல் முதலாய் புதினம்(நாவல்)படிக்க ஆரம்பிச்சேன்,ஏதோ ஒரு குடும்ப நாவல் தான்.கதை பெயர் ,ஆசிரியர் பெயர் ஞாபகத்திற்கு வரலை,ஆனா அந்த கதை சில காட்சிகள் தவிர்த்து எல்லாம் ஞாபகம் இருக்கு.அப்போ ஆரம்பிச்சி இப்போ வரை நிறைய புதினம் படிச்சி இருக்கேன் கட்டுரை ,கதை ரெண்டு மட்டும் தான் பிடிக்கும்,கவிதைக்கும் எனக்கும் ஆகவே ஆகாது அதனால சரியான நாவல் எதுன்னு தெரியாம இருந்தாலும்,அம்மா வாங்குவாங்க நானும் படிப்பேன் அவ்வளவுதான் (புதினம்னாக்ரைம் நாவல்’ , ‘குடும்ப நாவல்மாறி தான் விலைக்குறைச்சலா வரும்னு நினைச்சிட்டு இருந்தேன்ன பார்த்துக்குங்க).அனேகமா அதுராஜெஷ்குமார்,சுபா,இந்திரா சௌந்தரராஜன்ஆகத்தான் இருக்கும்.அது என் கல்லூரி வரை தொடர்ந்தது. ‘சுஜாதாமுதல்ல தொலைக்காட்சி மூலமாய்தான் அறிமுகம் ஆனார். என்னை பொருத்தவரை அவர் ஒரு எழுத்தாளர், நாவல்கள் திரைப்படமா வந்திருக்கு, டைரக்டர் மணிரத்தினம், ஷங்கரின் நண்பர். ஒரு நாள் கல்லூரியில நானும் பவ்யாவும் (தோழி) ஒரு நாள் புத்தகத்தை பற்றி பேசும்போது,”மாலதிசுஜாதாகதைய படிச்சி இருக்கியான்னு கேட்டா. “இல்லைன்னு, கேனைத்தனமா ஒரு விழிச்சேன் பாருங்க!! . அடுத்த நாள் நூலகத்தில இருந்து எடுத்துட்டு வந்தஆரியபட்டா’, அந்த கதை ஒரு பழைய படம் போல் இருந்தது (அந்த நாள், 1954, சிவாஜி கணேசன், பண்டரி பெயர், பாடல்கள் இல்லாத முதல் தமிழ்ப்படம்).அதன் முன்னுரையில் தெரிந்தது அது அவருடைய கரு இல்லையென்பது, அது ஒரு கனடா மொழி திரைப்படத்திற்காக எழுதியது, அதனால் சின்ன ஆருதல். அதற்கு அப்புறம் நிறைய அவரை பற்றி தெரிந்துக்கொண்டேன் முதல்ல பவ்யா மூலமா, அடுத்து சில புத்தகங்க மூலமா, இப்போ இணையத்துல தெரிஞ்சிக்கிட்டே இருக்கேன்,சுஜாதாவ தெரிஞ்சிக்கும் போது பல எழுத்தாளர்களை பற்றி தெரிஞ்சிக்கிட்டேன்ஜெயகாந்தன்,ஜெயமோகன்,ரா.கி.ரங்கராஜன்’.ஆனா நூலகத்துல ஆயிரக்கணக்கான புத்தகம் எங்கன்னுப்போய் தேடுவேன் நம்ம சுஜாதாவ.இணையத்துல இருந்து டவுன்லோட் செஞ்சி படிக்க எவ்வளவு நேரமாக போகுது,ஆனா அது சிறுகதைகளுக்குப் பொருந்தும்,நாவலுக்கு மத்தவங்கவளுக்கு எப்படியோ எனக்கு புத்தகம் தான்.காசுகொடுத்து வாங்கலாம்னா பல தேவைங்க நிறைவேறாமையே இருக்கு ,நிறைய நான் சம்பாதிச்சி வாங்கனும்.இந்த கஷ்டத்துக்கு நடுவுல ஒரு அதிசயம்.
                                                                இரத்தம் ஒரே நிறம்
ஒரு நாள் நூலகத்தில இருந்து வந்த என் அம்மாஇரத்தம் ஒரே நிறம்புத்தகத்தை எடுத்துட்டு வந்தாங்க.எனக்கு ஒரே குஷி. இரண்டே நாள்ல தூக்கத்தை கெடுத்துக்கிட்டு படிச்சி முடிச்சிட்டேன்.ஒரு திரைப்படத்தை பார்த்த அனுபவம்,ரொம்ப அருமையான,விறு விறுப்பான காட்சிகள்.சுஜாதாவிற்குன்னு தனி எழுத்துபாணி இருந்ததை புரிந்துக்கொண்டேன்.அந்த நாவல் சுஜாதா எழுதிய இரண்டு சரித்திர நாவல்களில் ஒன்று.பத்தொண்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் (1856) நடந்த சிப்பாய் கலகத்தை முன்னிருத்தி பல உண்மை சப்பவத்தோடு பிணைக்கப்பட்டு இருந்து.
அதற்கு பிறகு ஆர்வம் தாங்க முடியாமல் இனையத்தை நாடினேன்.சுஜாதாவின் நாவல்களை தொடர்ந்தது வேட்டையாட ஆரம்பித்தேன்.
கொலையுதிர்காலம்
கனேஷ்-வசந்த் கதாப்பாத்திரங்களைக்கொண்ட துப்பறியும் நாவல்.துப்பறியும் நாவல் என்னுடைய பிடித்த தலைப்புகளில் ஒன்று.1977இல் வெளியான நாவல்.இந்தனை வருடம் கழித்தும் அதன் விறுவிறுப்பு குறையவில்லை .சுஜாதாவின் நாவலில் இது சிறந்தது அல்ல ஆனால் பொழுதுப்போக்கிற்கு வாக்குறுதி உண்டு.பொழுதுபோக்கிற்கு சிறந்தது கொஞ்சம்பேண்டசிலைட்டா கடைசியா இருக்கும்.
                                                                   ஓடாதே            
அடுத்த கனேஷ்-வசந்த் துப்பறியும் நாவல், ஆனால் பாதி பகுதிக்கு மேல் தான் இருவரும் வருவார்கள்.மீரா-ஆனந்த் கதாபாத்திரங்கள் கதையில் ஓடிக்கொண்டேயிருப்பார்கள், கடைசியில் நிற்கும்போது ஷ்ஷப்பா…..முதல் பகுதி பர பரன்னு போகும்.

நைலான் கயிறு,நிர்வாண நகரம்,அரிசி(சிறுகதை),மிஸ்டர் முன்சாமி ஒரு 1.2.1(சிறுகதை),ஆனாமிகா(சிறுகதை) நீண்டுக்கொண்டே போகிறது.                                                     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக